2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐக்கிய இராச்சியத்தில் தாக்குதல் ஆபத்துக் குறைக்கப்பட்டது

Editorial   / 2017 மே 28 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தில், இன்னொரு தாக்குதல் உடனடியாக நடைபெறும் என, ஐக்கிய இராச்சிய புலனாய்வு நிபுணர்கள் இனியும் நம்பவில்லையென, ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, நேற்று (27) தெரிவித்துள்ளார்.   

மன்செஸ்டரில், இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக, தமது விசாரணையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பொலிஸார் அடைந்ததையடுத்தே, உடனடியாக தாக்குதல் நடைபெறும் என, புலனாய்வு நிபுணர்கள் இனியும் நம்பவில்லை.   

தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி சல்மான் அபேடிக்கு பின்னாலுள்ளது எனச் சந்தேகிக்கப்படும் வலையமைப்பை நெருங்கியுள்ள பொலிஸார், மேலுமிரண்டு கைதுகளை மேற்கொண்டதோடு, தாக்குதலை மேற்கொள்ளப் பயன்படுத்திய சாதனம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்ற தெளிவான புரிதலைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

 

இதேவேளை, அபேடி, கடந்த திங்கட்கிழமை (22), தன்னை வெடிக்க வைத்து 22 பேரைக் கொல்ல முன்னர், அன்றிரவு எடுக்கப்பட்ட அபேடியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், மன்செஸ்டர் மத்தியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றிலேயே, தனது குண்டை அபேடி பொருத்தியதாக நம்புகின்றனர்.   

இந்நிலையில், லிபியாவிலிருந்து, அண்மையிலேயே, ஐக்கிய இராச்சியத்துக்கு அபேடி திரும்பியதாக, ஐக்கிய இராச்சிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஐக்கிய இராச்சியத்துக்கு, அபேடி திரும்பிய 18ஆம் திகதி முதல் அவரது நகர்வுகள் குறித்த தகவல் பொலிஸாருக்குத் தேவைப்படுதாகக் கூறியுள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .