2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐ.எஸ் குண்டுத்தாக்குதல்களில் 121 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 மே 23 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டினால் கட்டுப்படுத்தப்படும் இரண்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளால், குறைந்தது 121 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரான டார்டௌஸில், தற்கொலைக் குண்டுதாரியொர் குண்டை வெடிக்க வைத்ததோடு, பின்னர் கார்க் குண்டுத் தாக்குதலொன்று சில நிமிட இடைவேளையில் மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் குறைந்தது 73 பேர் பலியாகினர்.

ஜப்லெ நகரில் பஸ் தரிப்பிடம், வைத்தியசாலை உள்ளிட்டவற்றை இலக்குவைத்து நான்கு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் குறைந்தது 48 பேர் பலியாகினர்.இந்தத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவே காரணமென, அக்குழுவுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமொன்று ஏற்றுக் கொண்டுள்ளது.

இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகரில், போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிக்கான ஒரேயொரு வீதியில், ரஷ்யாவின் போர் விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அப்பகுதிகளுக்கான வீதிமூலமான அணுக்கம், கிட்டத்தட்ட இல்லாது செய்யப்பட்டுள்ளது.

கஸ்டெல்லோ வீதி என்ற குறித்த வீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தும், குறித்த வீதி திறந்தே காணப்படுகின்ற போதிலும், ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 300,000 சிரியர்கள், மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆபத்தை அடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களை மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகமும் போராளிக் குழுக்களின் அதிகாரியொருவரும் உறுதிப்படுத்தினார்.

துருக்கி எல்லையிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அலெப்போ நகரம், அரசாங்கப் படைகளாலும் போராளிக் குழுக்களாலும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இரு தரப்புகளுக்குமிடையில் போர் தவிர்ப்பொன்று அமுலிலுள்ள போதிலும், யுத்தம் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X