2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐ.எஸ் நிதியமைச்சரை கொன்றோம்: அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான்தாக்குதலொன்றில், ஐ.எஸ்.ஐ.எஸ் இன் நிதியமைச்சர் உட்பட, அக்குழுவின் முக்கிய தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதாக ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே, ஹஜி இமான் என அறியப்படும் அப்ட் அல்-ரஹ்மான் முஸ்டஃபா அல்-குவாடுலியை ஐக்கிய அமெரிக்கப் படைகள் கொன்றதாக கார்ட்டர் தெரிவித்தார். இதன் காரணமாக ஐ.எஸ்.ஐ.எஸ் இன் தலைமைத்துவத்தில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட நபரை ஹஜி இமான் எனத் தெரிவித்த கார்ட்டர், ஐ.எஸ்.ஐ.எஸ் இன் நிதியை அவரே கையாளுவதாக தெரிவித்ததுடன், தாங்கள் திட்டமிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இன் அமைச்சரவையை அழித்துவருவதாக தெரிவித்தார்.

மேற்படி தலைவர் அகற்றப்பட்டதன் மூலம், ஈராக், சிரியாவில் உள்ளேயும் வெளியேயும் தாக்குதல் நடத்தும் திறனில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்தாண்டு மே மாதமும் வான் தாக்குதலொன்றில் இவர் கொல்லப்பட்டதாக ஈராக் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகளே தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் உண்மையான திட்டத்தின்படி அவரைக் கொல்வதற்கு பதிலாக அவரை உயிரோடு பிடிப்பது என்றே இருந்ததாகவும் ஆனால், கொமாண்டோக்களின் ஹெலிக்கொப்டர், தரையிலிருந்து சூட்டை எதிர்நோக்கியதாகவும் அதனையடுத்தே வானிலிருந்து தாக்குதல் நடாத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X