2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஐ.எஸ் முன்னாள் தலைவரின் மனைவியை துருக்கி கைப்பற்றியது’

Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் முன்னாள் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் மனைவியொருவரை துருக்கி கைப்பற்றியதாக துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் நேற்று தெரிவித்துள்ளார்.

அங்காரா பல்கலைக்கழகமொன்றிலான உரையொன்றிலேயே குறித்த விடயத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி எர்டோவான், அல்-பக்தாதியின் சகோதரியையும், சகோதரியின் கணவரையும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றியதாகக் கூறியபோதும், வேறெந்தத் தகவல்களையும் அவர் வழங்கியிருக்கவில்லை.

இவ்வார ஆரம்பத்தில், அல்-பக்தாதியின் சகோதரியையும், அவரது கணவரையும், மருமகளையும் துருக்கி கைப்பற்றியதாகத் தெரிவித்திருந்த சிரேஷ்ட துருக்கி அதிகாரியொருவர், அவர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு பற்றிய புலனாய்வுத் தகவல்களை பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அல்-பக்தாதியின் மனைவி கைப்பற்றப்பட்ட நடவடிக்கையானது, துருக்கியின் ஹதாய் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு 11 சந்தேகநபர்களை துருக்கிப் பொலிஸார் கடந்தாண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி கைப்பற்றப்பட்டபோது நடந்ததாக சிரேஷ்ட துருக்கி அதிகாரியொருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட நான்கு பெண்களில் ஒருவர் தன்னை வேறொருவராகவே அடையாளப்படுத்தியதாகவும், ஆனால் அவர் அல்-பக்தாதியின் முதல் மனைவி அஸ்மா பெளசி முஹமட அல்-குபாய்ஸி என குறித்த அதிகாரி கூறியிருந்தார். மரபணுச் சோதனையில் இன்னொரு சந்தேகநபர் அல்-பக்தாதியின் மகள் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும், துருக்கியிலுள்ள தடுப்பு நிலையமொன்றில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .