2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடிதத்தால் குழப்பம்: ஈராக்கிலிருந்து வெளியேறுவதை மறுக்கும் ஐ. அமெரிக்கா

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் நேற்று மறுத்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க ஜெனரலொருவரிடமிருந்தான கடிதமொன்று ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதாக குறிப்புணர்த்தியைத் தொடர்ந்தே மேற்படி மறுப்பு வெளியாகியுள்ளது.

ஐக்கிய அமெரிக்கப் படைகளை வெளியேறுமாறு ஈராக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியதைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்கள், வாரங்களில் படைகளை ஐக்கிய அமெரிக்கா இடம் மாற்றும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈராக்கிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் வில்லியம் எச் சீலியால், ஒன்றிணைந்த இணைந்த நடவடிக்கைகளின் பிரதிப் பணிப்பாளர் அப்துல் அமிருக்கு அனுப்பப்ட்டிருந்தது.

கடிதத்தில் பாதுகாப்பான வெளியேற்றத்துக்காக இரவுகளில் அதிகரித்த வான் போக்குவரத்துக்கு குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈராக்கின் பச்சை வலயத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறுதலை உணர்த்துவதற்காகவே இக்கடிதம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 ஈரானிய புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டு படைப்பிரிவான குவாட்ஸ் படையின் தளபதியான குவாசிம் சொலெய்மானியை ஈராக் தலைநகர் பக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொன்றமையத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே குறித்த விடயம் நடந்தேறியுள்ளது.

ஈராக்கில் 5,000க்கும் மேற்பட்ட ஐக்கிய அமெரிக்கப் படைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .