2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கடலுக்குள் மூன்று எறிபொருள்களை ஏவிய வடகொரியா’

Editorial   / 2020 மார்ச் 09 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

          

மூன்று மாத கால இடைவெளியைத் தொடர்ந்து வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குப் பிறகு, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஏவல் ஒத்திகைகளின் அங்கமாக பல குறுந்தூர எறிபொருள்களை கடலுக்குள் இன்று வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

பல்லூடக றொக்கெட் ஏவும் அமைப்பொன்றிலிருந்து ஏவப்பட்ட ஆட்லறி உள்ளடங்கலான எறிபொருள்கள் 200 கிலோ மீற்றர் வரை சென்றதாகவும், 50 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்ததாக தென்கொரியாவின் பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டு வடகொரியா ஏவுகணைகளை ஏவிய இராணுவ விமானத்தளமொன்றைக் கொண்ட கிழக்கு கரையோர நகரமான சொன்டொக்கிலிருந்தே குறித்த எறிபொருள்கள் ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் தென்கொரியாவின் பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாத இறுதி முதல் இடம்பெறுவதும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னால் தனிப்பட்ட ரீதியில் மேற்பார்வையிடப்படுவதுமான ஏவல் பயிற்சிகளின் அங்கமொன்று போலத் தோன்றுவதாக தென்கொரியாவின் பணியாட்தொகுதியின் தலைவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஏவுகணைகள் போல எறிபொருள்கள் தென்படுவதாக ஜப்பானிய பாதுகாப்பமைச்சர் தாரோ கொனோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு கடலை நோக்கி குறைந்தது மூன்று எறிபொருள்களை வடகொரியா ஏவியதாக தன்னை அடையாளங்காட்ட விரும்பாத ஐக்கிய அமெரிக்க அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .