2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொமாவில் வீடுகளின் மீது விமானம் வீழ்ந்தது: 29 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கொமா நகரத்தின் மிகவும் சனநெருக்கடிமிக்க பகுதியிலிருந்து புறப்பட்ட சிறிய விமானமொன்று வீழ்ந்ததில், குறைந்தது 29 பேர் நேற்று  கொல்லப்பட்டுள்ளனர்.

விமானத்திலிருந்த 17 பயணிகள், இரண்டு விமானப் பணியாளர்கள் என 19 பேரில் உயிர்தப்பிய ஒருவர், தரையில் காயமடைந்த வேறு 16 பேருடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக வட கிவு பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிதைவுகளிலிருந்து தற்போதைய நிலையில் 29 சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கையொன்று கூறுகின்றது.

பிஸி பீயின் டொர்னியர்-228 ரக விமானமானது, விமானநிலையத்துக்கு அருகே இரண்டு வீடுகளைத் தாக்கியதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஜக் யூமா கிபுயா முன்னர் தெரிவித்திருந்தார்.

குடியிருப்புப் பகுதியிலிருந்து புறப்பட்டு அது கீழே விழ முன்னர் விமானமானது, கோமாவிலிருந்து வடக்காக 350 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பெனி நகரத்தை நோக்கிச் சென்றிருந்தது.

இந்நிலையில், தனது புறப்படுகையில் விமானி தோல்வியடைந்ததாக வட கிவு ஆளுநர் கார்லி என்ஸன்ஸு கஸிவிட்டா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொழில்நுட்பப் பிரச்சினையே விமானம் விழுந்ததுக்கு காரணம் என சம்பவ இடத்திலிருந்த பிஸி பீயின் பராமரிப்புப் பணியாளரொருவர் கூறியதாக அக்குவாலைட்.சி.டி இணைய்த்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இயந்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்படும் தாம் கேட்ட பாரிய சத்தமொன்றைத் தொடர்ந்து, விமானநிலையத்தை நோக்கி விமானத்தைத் திருப்ப விமானி முயன்றதாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவிர, விமானத்தில் இயந்திரமானது அண்மையிலேயே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X