2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குண்டூஸ் மாகாணத்தில் தலிபான்கள் தாக்குதல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் மாவட்டமொன்றை கைப்பற்றும் பொருட்டு, குறைந்தது 100 தலிபான் போராளிகள், மாவட்டமொன்றை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், பாதுகாப்புப் படைகள், தலிபான்களை பின்தள்ளியுள்ளதாக, குறித்த குவலாய் ஸல் மாவட்டத்தின் ஆளுநர் மஹ்புபுல்லாஹ் சயீடி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் மாகாண சபை உறுப்பினர் அம்ருட்டீன் வாலி தெரிவித்த கருத்தானது, ஆளுநரின் கருத்துக்கு எதிர் மாறாகவே அமைந்துள்ளது. குறித்த மாவட்ட அலுவலகம், பொலிஸ் கட்டடங்கள் தவிர, குறித்த மாவடாத்தின் பெரும்பான்மையான பகுதிகளை போராளிகள் குழுவொன்று கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ 500 வரையிலான தலிபான் தாக்குதலாளிகள் காணப்பட்டதாக தெரிவித்த வாலி, தளபதியொருவர் உள்ளடங்கலாக தலிபான்கள் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாகவும், மறுபுறத்தில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையின் அங்கத்தவரொருவர் இறந்ததாகவும் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளதோடு, மோதல் இடம்பெறும் நகரத்திலுள்ள பெரும்பாலான பொதுமக்கள், மேலும் பாதுகாப்பான இடங்களுக்குள் நகர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் வடக்கில் கொந்தளிப்பில் காணப்படும் மாகாணங்களில் குண்டூஸ் ஒன்று என்பதுடன், குறித்த மாகாணத்தின் தலைநகரானது, கடந்த வருடம், குறிப்பிட்ட காலப்பகுதியில் தலிபான்களுடன் வீழ்ந்திருந்ததுடன், பெரும்பாலான மாவட்டங்களில் தலிபான்களின் பிரசன்னம் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .