2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காணாமல்போயிருந்த இந்தியர் கொல்லப்பட்டு விட்டார்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 29 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத்தின் ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த இந்தியர், அந்தத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மென்பொருள் பொறியியலாளரான ராகவேந்திரன் கணேஷன், இத்தாக்குதல்களைத் தொடர்ந்து காணாமல் போயிருந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்தமையை, பெல்ஜியத்திலுள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'துரதிர்ஷ்டவசமாக, தற்கொலைக் குண்டுதாரி தன்னைத் தானே வெடிக்க வைத்த ரயிலிலேயே அவர் பயணித்துக் கொண்டிருந்தார்" எனத் தெரிவித்தார். அவரது சடலம், மிக விரைவில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

முன்னதாக, தாக்குதல்களைத் தொடர்ந்து, தான் பாதுகாப்பாக இருப்பதாக பேஸ்புக் இணையத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .