2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீனாவில் கடும் மழை;1000 பொதுமக்கள் மீட்பு

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சீனாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கிலிருந்து 1000 பொதுமக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சீனாவின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 35,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சீனாவில் 9 மாகாணங்களில் கடந்த 2 வாரங்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால் 199 பொதுமக்கள் உயிரிழந்திருக்கும் அதேவேளை, 123 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இதனால் 29 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன்,  2.6 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சீனாவில் பொருளாதார இழப்புக்களும் ஏற்பட்டிருப்பதாகவும் சீன ஊடகங்கள் குறிப்பிட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .