2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிக்கினார் கொங்கோவின் முன்னாள் உப ஜனாதிபதி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 22 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தாண்டுகளுக்கு முன், மத்திய ஆபிரிக்க குடியரசில் மனிதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம், குற்றங்களில் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் முன்னாள் உப ஜனாதிபதி ஜீன்-பியர்ரி பெம்பா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

படுகொலை, வன்புணர்வு, கொள்ளையில் ஈடுபட்ட, 1,500 பேரைக் கொண்ட தனியார் இராணுவத்தை பெம்பா வழிநடத்திய நிலையிலேயே, அவரது துருப்புக்களின் நடவடிக்கைகளுக்கு, அத்துருப்புக்களின் இராணுவத் தளபதியே பொறுப்பு என்ற நிலையில் நோக்கப்பட்டே கடந்த திங்கட்கிழமை (21) தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஜனாதிபதியாக அன்கே-பெலிக்ஸ் படஸ்ஸே இருந்த சமயம் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது, பெம்பா மேற்கொண்ட இராணுவத் தலையீட்டின் போதே, மனிதத்துக்கு எதிராக இரண்டு குற்றங்கள் புரிந்ததாகவும் மூன்று போர்க் குற்றச்சாட்டுக்களும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

பெம்பா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையிலேயே, மோதலொன்றில் படைவீரர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு பாலியல் துன்புறுத்தல்கள் முதன்முதலாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .