2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிரியாவுக்குச் சென்ற ரஷ்ய ஜெட் வீழ்ந்தது: எவரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவுக்குச் சென்று கொண்டிருந்த ரஷ்ய இராணுவமொன்று இன்று வீழ்ந்ததில், அதிலிருந்த 92 பேரில் ஒருவரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் தெற்கு நகரான அட்லரில், எரிபொருள் மீள்நிரப்பிய பின்னர், சிறிது நேரத்திலேயே Tu-154 இரக விமானம், கருங்கடலில் வீழ்ந்ததாக, ரஷ்ய பாதுகாப்பமைச்சின் பேச்சாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி, நேற்றுக் காலை 7.55க்கு மேலெழுந்த விமானம், இரண்டு நிமிடங்களில் றாடாரிலிருந்து காணாமல்போயுள்ளது.

கரையோர நகரமான சோஷியின் கரையோரத்தில் நான்கு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எவரும் உயிர்தப்பியிருப்பதுக்கான வாய்ப்புகள் இல்லையென்று ரஷ்ய பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளார்.

விமானத்தின் பாகங்கள், சோஷியிலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில், 50 தொடக்கம் 70 மீற்றர்கள் ஆழத்தில் மீட்கப்பட்டதாக பாதுகாப்பமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தின் உத்தியோகபூர்வ இசைக் குழுவான அலெக்ஸான்ட்ரோவ் என்செம்ப்ளேயின் 64 அங்கத்தவர்கள் உட்பட 84 பயணிகள், ரஷ்யப் படையினர் விமானத்தில் சென்றிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .