2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிரியாவின் ஹமா சிறைச்சாலையில் அரசாங்க அதிகாரிகளை கைப்பற்றிய சிறைக்கைதிகள்

Shanmugan Murugavel   / 2016 மே 29 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நிலை பொலிஸ் அதிகாரி உட்பட சில அரசாங்க அதிகாரிகளை சிரியாவின் ஹமா மத்திய சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் சிறைப்பிடித்துள்ளதாக குறித்த சிறைச்சாலையிலுள்ள தகவல் மூலங்கள் சனிக்கிழமை (28) தெரிவித்துள்ளன.

மேற்படி சம்பவத்தை உறுதிப்படுத்திய ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம், சிறைச்சாலையின் தலைவர், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் அரசாங்கப் படைகளின் ஒன்பது பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மரண தண்டனைக்காக, சிறைக் கைதிகள் 11 பேர், சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு மாற்றப்படுவார்கள் என நீதிபதி  றிடா மூஸா தெரிவித்தமையையடுத்தே சக சிறைக்கைதிகள் கிளர்ச்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உணவுத் தட்டுப்பாடு, நீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் பற்றி கலந்துரையாடுவதற்கே மூஸா சிறைச்சாலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. உணவுத் தட்டுப்பாடு மற்றும் மோசமான மருத்துவ நிலைமைகளுக்குள் மின்சாரத்தையும் நீரையும் தருமாறு முன்னர் சிறைக்கைதிகள் கோரியதாக ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கப் படைகள் சிறைச்சாலையை சூழ்ந்துள்ளதாகவும், கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதாக ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .