2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தலையடுத்து கொங்கோவில் பதற்றம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 22 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொங்கோவின் அடுத்த ஜனாதிபதித் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும், அந்நாட்டின் தொடர்பாடல் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கொங்கோவின் ஜனாதிபதியாக 32 ஆண்டுகள் பதவி வகித்துவரும் டெனிஸ் சஸோ குவெஸ்ஸோ, அடுத்த தடவையும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்காக இத்தேர்தலில் போட்டியிடும் நிலையிலேயே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இணைய வசதிகளும் தொலைபேசி வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் காரணமாக அந்நாட்டின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் கருத்தின்படி, வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து கிடைக்கும் அறிக்கைகளின்படி, தாங்களும் வாக்கெண்ணுதலில் ஈடுபட்டுவருவதாகவும், ஜனாதிபதியை எதிர்த்துப் போட்டியிட்ட 8 பேரில் கை-பிறைஸ் கோலெலாஸ், மிக முன்னணியில் காணப்படுவதாக, எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X