2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ட்ரம்ப்பை விமர்சிக்கிறார் ஆஸி வெளிநாட்டமைச்சர்

Editorial   / 2017 ஜூலை 16 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் முதற்பெண்மணி பிரிஜெட் மக்ரோனின் தோற்றம் குறித்த கருத்துகளை வெளியிட்ட, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது, அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் ஜூலி பிஷப், விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று, பிரான்ஸுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் மனைவியைப் பார்த்து, "நீங்கள் சிறந்த உடற்கட்டமைப்பில் இருக்கிறீர்கள்" எனத் தெரிவித்ததோடு, பின்னர் ஜனாதிபதியிடமும் அதே விடயத்தை மீளக் கூறியிருந்தார்.

இது குறித்து, அமைச்சர் ஜூலி பிஷப்பிடம், அவ்வாறு அவர் அமைச்சரைப் பார்த்துக் கேட்டால் எவ்வாறு உணர்வீர்கள் என்று கேட்கப்பட்ட போது, "நான் அதிர்ச்சியடைவேன்" என்று அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜூலி பிஷப், "அவரை (ட்ரம்ப்) பார்த்து அவரும் (பிரிஜெட் மக்ரோன்), அதே விடயத்தை (நல்ல உடற்கட்டமைப்பில் உள்ளீர்கள்) கூற முடியுமா என்று சிந்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X