2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தென் கிர்கிஸ்தானில் இடம்பெயர்ந்த மக்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிர்கிஸ்தானில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த இனக்கலவரம்  காரணமாக, அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி  இனக்கலவரம்  காரணமாக, 70,000 மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்த நிலையில், சுமார் 1000 பொதுமக்கள் தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் தெரிவித்தது.

தற்போது பல முகாம்கள் வெறுமையாகக் காணப்படுவதாகவும் அந்த முகவர் நிலையம் குறிப்பிட்டது.

இந்த  இனக்கலவரத்தில் இதுவரையில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிர்கிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த பகியெவ் குர்மன் பெக்  கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகியதையடுத்து, ஓஷ் பகுதியில் வன்முறை இடம்பெற்று வந்திருந்தது.  பாகியோவ் ஆதரவாளர்கள் இங்கு அதிகம் வசிப்பதே, இதற்கு முக்கிய காரணமாகும்.

கிர்கிஸ்தானில் இடம்பெற்ற மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X