2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தாய்லாந்து தலைநகர் மத்திய பாங்கொக்கிற்குள் நுழைவதற்கான நடவடிக்கையில் இராணுவம்

Super User   / 2010 மே 19 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில்  இராணுவத்தினருக்கும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், இராணுவத்தினர் மத்திய பாங்கொக்கிற்குள் நுழைவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் கண்ணீர்ப் பிரயோகங்களை தாய்லாந்து இராணுவத்தினர் மேற்கொண்டுவருவதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

செஞ்சட்டை ஆர்பாட்டக்காரர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இன்று காலை ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்படி மோதலில் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகாயமைடைந்துள்ள அதேவேளை, கடந்த வாரம் முதல் இடம்பெற்றுவரும் மோதலில் இதுவரையில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்திலிருந்து விலகினால் மாத்திரமே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுமென தாய்லாந்து அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவிருப்பதாகவும் தாய்லாந்து அரசாங்கத்தின் ஆலோசகர் குறிப்பிட்டார்.

தாய்லாந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுபடுவதற்கு தயார் என்று  செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தனர்.

ஆர்பாட்டக்காரர்களின் இந்தச் செயலால் பாங்கொக் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, தாய்லாந்தில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், தாய்லாந்தில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அதிகாரிகளிடமும்,  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான்கீமூன் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரி தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த 2 மாதங்களாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X