2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தேர்தலைப் பிற்போடக் கூடாது’

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தலைப் பிற்போடக்கூடாது என, இலண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது முதலாவது அறிக்கையில், தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்த அவர், இரண்டாவது அறிக்கையில், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, நகரில் பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கப்படுமென்ற போதிலும், பீதியடையத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

ஆபத்து நிலைமை, பாரதூரமானது என்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், இன்னொரு தாக்குதல் இடம்பெறுவதற்கு, அதிக வாய்ப்புகள் உண்டு என அர்த்தமாகும்.

“நாங்கள் செய்யக்கூடிய விடயங்களில் ஒன்று, வியாழக்கிழமையன்று நாங்கள் வாக்களித்து, நாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதைக் காட்டுவதாகவும். அத்தோடு, எங்களது ஜனநாயகம், சிவில் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல் ஆகும்.

“தேர்தலைப் பிற்போடுவதற்கு வலியுறுத்தும் நபர் அல்லன் நான். ஜனநாயகத்தில் நான் அதிக விருப்புடன் நம்புகிறேன். இந்தப் பயங்கரவாதிகள், வாக்களிப்பதையும் ஜனநாயகத்தையும் உண்மையில் வெறுக்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய ரீதியிலான தங்கள் பிரசாரங்களை, நேற்றைய தினம், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .