2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துருக்கி இராணுவப் புரட்சி: 'தப்பித்தோரின் அகதிக் கோரிக்கை பரிசீலிக்கப்படும்'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் இராணுவப் புரட்சியை மேற்கொள்ள முயன்று, அந்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹெலிகொப்டரில் கிரேக்கத்துக்குத் தப்பிச் சென்ற துருக்கியப் படையினரின் அகதிக் கோரிக்கைகள், விரைவாகப் பரிசீலிக்கப்படுமென, கிரேக்கப் பிரதமர் அலெக்ஸிஸ் சீப்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிரேக்கத்துக்குத் தப்பிச் சென்ற இந்த 8 படையினரும், கிரேக்கத்தின் வடக்கு நகரான அலெக்ஸான்டோபொலிஸில் தரையிறங்கியதோடு, உடனடியாகக் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இவ்விடயம் தொடர்பான துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவானும் கிரேக்கப் பிரதமர் சீப்ரஸ{ம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அவர்களது அகதிக் கோரிக்கையைப் பரிசீலிப்பது, சர்வதேசச் சட்டத்தையும் மனித உரிமைகள் உடன்பாடுகளையும் முழுமையாக மதித்து இடம்பெறுமெனத் தெரிவித்த பிரதமர் சீப்ரஸ், அவை விரைவாகவும் இடம்பெறுமெனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .