2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நக்சல்களை ஒடுக்க 10,000வீரர்; எல்லை பாதுகாப்புப்படை தயார்

Super User   / 2010 மே 24 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நக்சலைட்களின் வன்முறை சம்பவங்களால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதை அடுத்து, அவர்களை ஒழிப்பதற்காக மேலும் 10ஆயிரம் எல்லைப் பாதுகாப்பு படையினரை, சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் கடந்த 6ஆம் திகதி நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 76பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த வாரம் தந்தேவாடாவில் நக்சலைட்களால் நடத்தப்பட்ட கண்ணி வெடித் தாக்குதலில் பயணிகள் பஸ் வெடித்துச் சிதறியதில், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உட்பட 50பேர் உயிரிழந்தனர்.

நக்சலைட்களின் தக்குதல்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அவர்களை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நக்சலைட்களை ஒழிப்பதற்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .