2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நைஜீரிய ஆயுதக் குழுவால் எண்ணெய்க் குழாய் வெடிக்க வைப்பு

Shanmugan Murugavel   / 2016 மே 29 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் டெல்டா பிராந்தியத்திலுள்ள பாரிய எண்ணெய்க் குழாயினை, கடந்த வாரத்தில் மூன்றாவது தடவையாக ஆயுதக் குழுவொன்று தாக்கியதாக, தாக்குதலுக்கு நைகர் டெல்டா அவெஞ்சேர்ஸ் குழு உரிமை கோரியதுக்கு பின்னரான சில மணித்தியாலங்களில் அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

மாதக்கணக்கான குண்டுத் தாக்குதல்களால், நைஜீரியாவின் எண்ணெய் உட்கட்டமைப்பை நைகர் டெல்டா அவெஞ்சேர்ஸ் நாசப்படுத்தியமையால், நாளொன்றுக்கு 2.2 மில்லியன் பரல்களாகவிருந்த தயாரிப்பானது, 22 வருடங்களில் இல்லாத வகையில், நாளொன்றுக்கு 1.4 மில்லியன் பரல்களாகக் குறைவடைந்துள்ளது.

எண்ணெய் ஏற்றுமதியை காவிச் செல்லும் நெம்பே குழாயையே சனிக்கிழமை அதிகாலையில் நைகர் டெல்டா அவெஞ்சேர்ஸ் குழு தாக்கியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .