2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நைஜீரியா ஜனாதிபதியை சந்திக்கவுள்ள மீட்கப்பட்ட மாணவி

Shanmugan Murugavel   / 2016 மே 19 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த நைஜீரிய பாடசாலை மாணவிகளில் ஒருவர் மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் நைஜீரிய ஜனாதிபதி முகம்மது புஹாரியை சந்திக்கவுள்ளார்.

இராணுவத்தினால் ஆதரவளிக்கப்படும் உள்ளூர் குழுவொன்றினாலேயே 18 வயதான அமினா அலி நெகேகி, குழந்தையொன்றுடன் கமரூன் நாட்டு எல்லைக்கு அருகிலுள்ள பாரிய சம்பிசா காட்டடில் கடந்த செவ்வாய்க்கிழமை (17) கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

இவர், கிழக்கு சிபோக்கிலுள்ள இரண்டாம் நிலைப் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த 219 மாணவிகளில் ஒருவராவார். இவர்கள், இஸ்லாமிய ஆயுதக் குழுவான போஹோ ஹராமினாலேயே கடத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அமினாவும் அவரது நான்கு மாதக் குழந்தையும் நைஜீரிய விமானப் படையினால், போர்னோ மாநிலத் தலைநகரமான மைடுகுரிக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். முன்னர் அவர்கள், உள்ளூர் இராணுவ நிலையம் ஒன்றில் பரிசோதிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை கருத்து தெரிவித்த ஜனாதிபதி புஹாரியின் பேச்சாளர், சமூகத்தில் அப்பெண்ணை இணைப்பதற்கு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

தற்போது நைஜீரிய இராணுவத்தின் காவலிலுள்ள, மொஹம்மெட் ஹயட்டு என்று பெயரிடப்பட்டுள்ள சந்தேகத்துக்கிடமான போஹோ ஹராம் போராளியொருவருடனேயே அமினா இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தான் அமினாவின் கணவர் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கெனவே இறந்த ஆறு பேரைத் தவிர ஏனைய அனைத்து சிபோக் பெண்களும் சம்பிஸாவில் தற்போதும் உள்ளதாக அமினா தெரிவித்ததாக, நைஜீரியத் தலைநகர் அபுஜாவிலுள்ள சிபோக் சமூகத்தின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .