2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீஸ் தாக்குதல்: 2 நாட்களுக்கு முன்னரே சென்ற தாக்குதலாளி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் நீஸ் நகரத்தில், பிரான்ஸின் தேசிய தினத்துக்கான வாணவேடிக்கைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது, ட்ரக் ஒன்றை ஏற்றி, 84 பேரைக் கொலை செய்த நபர், அத்தாக்குதலை நடத்துவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அப்பகுதிக்குச் சென்று, அவ்விடத்தைப் பார்வையிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.

துனிஷிய பூர்வீகத்தைக் கொண்ட 31 வயதான மொஹமட் லாஹோஐஜ் பௌலெல், பிஸ்டல் ஒன்றைப் பெற்றமை குறித்து மகிழ்ச்சியடைந்து, தாக்குதலை நடத்துவதற்குச் சில நிமிடங்கள் முன்னதாக அனுப்பிய குறுஞ்செய்தியும், பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஏனைய ஆயுதங்களின் விநியோகம் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடுகிறார்.
அங்கிருந்தோரை ஏற்றிக் கொன்ற ட்ரக் வண்டியில் ஏறிய பின்னர், செல்பி ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

இஸ்லாத்தைப் பின்பற்றுபவராக இருந்த போதிலும், குடிப்பதிலும் பெண்களோடு திரிவதிலும் அதிகமாக ஈடுபட்டார் எனவும், உள்ளூர் பள்ளிவாசல்களுக்கு அவர் சென்றதில்லை எனவும் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மைக்காலமாக அவர், கடும்போக்குவாத இஸ்லாத்தின் பக்கமாக மாறினார் என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, புலனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை, இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 பேரில், 52 பேரில் உடல்கள் மாத்திரமே இதுவரை அடையாளங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .