2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புகலிடம் கோரிய ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சாதகமாக பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது சொந்த நாடுகளில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவதாக தெரிவித்து, பிரிட்டனில் புகலிடம் கோரிய கெமரூன் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு புகலிடம் அளிக்குமாறு பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமது நாடுகளில் தமக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் சட்டநடவடிக்கையை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்து கெமரூன் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஆண்கள் இருவர் பிரிட்டனில் புகலிடம் கோரினர்.

ஆனால், இந்த காரணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு புகலிடம் அளிக்க முடியாது என  பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்தது.

இதனால் அவர்கள் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்படி நபர்களுக்கு பிரிட்டனில் புகலிடம் அளிக்குமாறு இன்று தீர்ப்பளித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .