2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களாதேஷில் கொல்லப்படோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்தது

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில், நிலச்சரிவுகள், கடும் மழை காரணமாக கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குச் செல்வதற்கு, மீட்புப் பணியாளர்கள், இன்று (14) போராடி வருகின்றனர்.   

கருத்துத் தெரிவித்துள்ள, ரங்கமட்டி மாவட்டத்தின் தீயணைப்புச் சேவைத் தலைவரான டிடருல் அலாம், மக்கள் புதையுண்டுள்ளதாக, சில பகுதிகளிலிருந்து மக்கள் அழைப்பதாகவும், ஆனால், அனுப்புவதற்கு, போதுமான ஆட்கள் இல்லை என்று கூறியுள்ளார்.   

இந்நிலையில், ரங்கமட்டி மாவட்டத் தலைவரான மன்ஸுருல் மன்னன், 100 பேர், ரங்கமட்டி கொல்லப்பட்டுள்ளதாகவும், மோசமாகக் காயடைந்த சிலர் உட்பட 200 பேர் காயமடைந்துள்ளதாகவும், 15 தொடக்கம் 20 வரையானோரைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .