2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷ் கபே முற்றுகை: பணயக்கைதிகள் இருவரின் நிலை தெரியவில்லை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள கபேயொன்றின் மீதான அண்மைய முற்றுகையின்போது, பாதுகாப்புப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் காணாமல் போன பணயக்கைதிகள் இருவரினைப் பற்றி எந்த தகவலுமில்லை என பங்களாதேஷிலுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹஸ்னட் கரிம், தஹ்மிட் கான் ஆகியோர் வீடு திரும்பவில்லையென அவர்களின் குடும்பங்கள தெரிவித்த நிலையில், அவர்கள் தொடர்பில் தமது கரிசனையை சர்வதேச மன்னிப்புச் சபை வெளிப்படுத்தியுள்ளது. கரிம் பங்களாதேஷ் நாட்டவர் என்பதோடு, கான், பங்களாதேஷை பூர்விமாகாகக் கொண்ட கனேடியர் ஆவார்.

பெரும்பாலான வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலாக, பணயக்கைதிகள் இருபது பேரும் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கொல்லப்பட்ட தாக்குதலில், பெரும்பாலான பங்களாதேஷ் நாட்டவர் உள்ளடங்கலாக, பணயக்கைதிகள் 13 பேர், கொமாண்டோக்கள் குறித்த கபேக்குள் நுழைய சற்று முன்னர் வெளியே வந்திருந்தனர். வெளியில் வந்தோரில் கரிமும் கானும் உள்ளடங்கியிருந்தனர்.

இந்நிலையில், கரிமும் கானும் சந்தேகநபர்களாக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரியொருவர், அவர்கள் தற்போது தடுப்பில் இல்லை எனக் கூறியுள்ளார்.

பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கரீமின் மனைவி, தனது கணவர் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கரீமை தடுத்து வைத்திருந்தது தொடர்பில், முன்னர், முரண்பாடான அறிக்கைகளை அதிகாரிகள் வழங்கியதாக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் குழு உரிமை கோரியிருந்த நிலையில், கரீம் மற்றும் கானுக்கு இத்தாக்குதலில் தொடர்பில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X