2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிணையில் வைகோ விடுதலை

Editorial   / 2017 மே 24 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசவிரோதக் குற்றச்சாட்டுக் காரணமாக, கடந்த 50 நாட்களாகச் சிறைவைக்கப்பட்டிருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். சென்னையிலுள்ள அமர்வு நீதிமன்றமொன்றினாலேயே அவர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சென்னையிலுள்ள மெட்ரோபொலிட்டன் நீதவான் நீதிமன்றத்தில், வைகோ, ஏப்ரல் 3ஆம் திகதி சரணடைந்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர், தனது பிணைக்கு, இன்று கோரிக்கை விடுத்ததோடு, அந்தப் பிணைக் கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .