2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பண்பாட்டு நினைவிடங்கள் அழிப்பு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக, பண்பாட்டு நினைவிடமொன்றை அழித்த குற்றத்துக்காக, நபரொருவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இராணுவ முரண்பாடுகளின் போது மனிதாபிமானச் சட்டங்களை மீறுவோர் மீது நடவடிக்கைகளை எடுக்கும் வழக்கத்தைக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அஹமட் அல்-பகி அல்-மஹ்டி என்ற நபர் மீது இவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

அல் கொய்தாவுடன் தொடர்புகளைக் கொண்ட அன்சார் டைன் என்ற மாலியைச் சேர்ந்த ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினரெனத் தெரிவிக்கப்படும் அல்-மஹ்டி, வடக்கு ஆபிரிக்க நகரான திம்புக்டு என்ற நகரிலேயே 2012ஆம் ஆண்டில் பண்பாட்டு நினைவிடங்களை அழித்தார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடமான இந்நகரத்தில், பண்பாட்டு இடங்களை அழித்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X