2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொதுத் தேர்தலொன்றை எதிர்பார்க்கும் ஜோன்சன்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்த மாதம் 31ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவதை தொழிலாளர் கட்சி, ஆளும் கட்சி எதிர்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிகரமாக முடக்கினால் பொதுத் தேர்தலொன்றை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எதிர்பார்க்கின்றார்.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) இன்னொரு தாமதத்தை தான் ஏற்றுக் கொள்ள மாட்ட்டேன் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளபோதும், ஒப்பந்தமில்லாத பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு நீடிப்பொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சனை கோர வைக்கும் சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அங்கிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலொன்றுக்கு மூன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு தேவையென்ற நிலையில், தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சியும், ஏனைய கட்சிகளும் ஆதிரிக்காது என்று கருதப்படுகிறது.

அடுத்த மாதம் 15ஆம் திகதி தேர்தலை நடத்த திட்டமிடப்படுகின்றது எனக் கூறப்படுகின்ற நிலையில் ஒப்பந்தமில்லாத பிரெக்சிற் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டாலே தேர்தலுக்கு ஆதரவளிப்போம் என தொழிலாளர் கட்சி கூறியுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்துக்கெதிராக நேற்று வாக்களித்த முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள் பிலிப் ஹமொன்ட், கென்ட் கிளார்க் உள்ளிட்ட 21 ஆளும் பழமைவாதக் கட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றும் முடிவானது பழமைவாதக் கட்சிக்குள் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

எதிரணியுடன் இணைந்து ஆளும் பழமைவாதக் கட்சியின் 21 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் பிரதமராக நாடாளுமன்றத்தில் முதலாவது தோல்வியை 328-201 என்ற வாக்குகளின் அடிப்படையில் தளுவியிருந்தார்.

இந்நிலையில், பிரெக்சிற்றுக்கு முன்பதாக நாடாளுமன்றத்தை மூடும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் திட்டத்தை சட்டரீதியற்றதென ஸ்கொட்லாந்து நீதிபதியொருவர் நிராகரித்திருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .