2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பின்லேடனின் இருப்பிடம் குறித்து பாகிஸ்தானுக்கு தெரியும் -ஹிலாரி

Super User   / 2010 மே 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்-குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் சிலருக்குத் தெரியும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ் என்னும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே ஹிலாரி கிளின்டன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பின் லேடன், முல்லா உமர் ஆகியோரின் இருப்பிடம் மற்றும் அவர்களது இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்து சில பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன் என்றும் அவர் அதன்போது கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா என்று கேட்டபோது, செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்துவதற்கு பாகிஸ்தானிடமிருந்து இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .