2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பயங்கரவாத புற்றுநோயால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல்

Super User   / 2010 மே 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதம் என்ற புற்றுநோயால் பாகிஸ்தானுக்குத்தான் ஆபத்தே தவிர இந்தியாவுக்கு அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய், ஒபாமாவை சந்தித்துப் பேசியுள்ளார். இதனையடுத்து கர்சாயுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பிரதான எதிரி இந்தியா என்றடொரு கருத்து இன்றுவரை அந்நாட்டிடம் இருந்துவந்தது. ஆனால் கடந்த பல மாதங்களாக தீவிரவாத இயக்கங்கள் அங்கு செயல்பட அனுமதிக்கப்படுவதும், தீவிரவாதிகள் அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு செல்வதும் பாகிஸ்தானின் இறையாண்மைக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று ஒபாமா கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கொண்டிருக்கும் சில நீண்டகால பழைய சந்தேகங்களையும், பழைய பழக்க வழக்கங்களையும் போக்கி, ஆப்கானிஸ்தானில் ஒரு நிலையான அரசை ஏற்படுத்துவதில் அக்கறைக்கொள்ளும் விதமாக மாற்றுவதே அமெரிக்காவின் இலட்சியம் என்றும் ஒபாமா மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .