2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பர்மா அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக இராணுவ அதிகாரி தகவல்

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பர்மா அணுவாயுதங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நோர்வே நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே, முன்னாள் பர்மா இராணுவ அதிகாரி மேஜர் சாய் தெய்ன் வின் இதனைக் கூறினார்.

இந்நிலையில், பர்மாவில் யூரேனியம் உற்பத்தி செய்வதற்கான  பரிசோதனைகள் நடைபெற்றிருப்பதாகவும்  அந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டார்.

அணுவாயுத உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திர சாதனங்களின் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களையும் குறித்த இராணுவ அதிகாரி சமர்ப்பித்துள்ளார்.

சக்திவளப் பயன்பாட்டை விடவும் பர்மா ஆயுத உற்பத்திக்காக அணுசக்தியைப் பயன்படுத்தி வருவதாகத் தெரியவருகிறது.


 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .