2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பொருளாதாரத் தடை வரும்’

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொதுமக்களிடத்தில் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டின் அரசமைப்பை வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ  மாற்றுவார் எனில், வெனிசுவேலா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி மதுரோவை, "சர்வாதிகாரியாக வருவதற்கு முயலும் தவறான தலைவர்" என்று வர்ணித்த ஜனாதிபதி ட்ரம்ப், வெனிசுவேலா நிலைகுலையும் போது, அதைப் பார்த்துக் கொண்டு, ஐ.அமெரிக்கா இருக்காது எனவும் தெரிவித்தார்.

என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படுமென்பதை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தாத போதிலும், அவரது எச்சரிக்கை, வெனிசுவேலாவை ஏற்கெனவே தாக்கியுள்ள பொருளாதார, அரசியல் நெருக்கடியை, மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை, ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவானதாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை, ஐ.அமெரிக்காவின் நடவடிக்கை எனவும் கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கான முயற்சியெனவும், ஜனாதிபதி மதுரோ வர்ணித்து வருகிறார். தற்போது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் நேரடியான எச்சரிக்கை, ஜனாதிபதி மதுரோவின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X