2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொருளாதார தடை விதித்தால் அணு திட்ட பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் ஜனாதிபதி

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டால் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை தமது நாடு நிராகரித்துவிடும் என்று அந்நாட்டு ஜனாதிபதி அகமது நிஜாத் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான நான்காவது பொருளாதார தடையினை விதிப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் இந்த தீர்மானத்தைக் காட்டி அச்சுறுத்தி தங்களை பேச்சுவார்த்தையில் உட்கார வைக்கலாம் என நினைத்தால் அது தவறாக போய்விடும் என்று அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளிடம் தாம் திட்டவட்டமாக கூறஇயுள்ளதாக ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மரியாதையும், உறுதியும் உள்ள ஒவ்வொருவரிடம் பேச்சு நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு எங்களுடன் பேசலாம் என யாராவது நினைத்தால், அதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X