2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பலம் இழக்கிறது அல்குவைதா; இமாம்கள் ஆதரவு இல்லை; அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் பயங்கரவாத விதையை தூவி வரும் அல்குவைதா அமைப்பு தற்போது பலவீனமடைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்த அமைப்பினருக்கு ஆதரவு பெருமளவில் இல்லை என்றும் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத கண்காணிப்பு தலைமை துணை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கோடக் என்வர் இது குறித்து கூறியிருப்பதாவது :-

அல்குவைதா மற்றும் அதனுடன் இணைந்த மதவாத பயங்கரவாத அமைப்பினர் சமீப காலமாக பின்னடைவுகளை சந்தித்து வருகின்றனர். இந்த அமைப்பின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டு இருப்பதால், இந்த அமைப்பு உலக அளவில் பலவீனமடைந்திருக்கிறது.

குறிப்பாக, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த அமைப்பினருக்கு சில வெற்றிகள் கிடைத்திருந்தாலும், ஏற்பட்ட தோல்விகள், பின்னடைவுகள் அதிகம்.

இந்த அமைப்பினர் நடத்தும் தாக்குதல்களால் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அல்ஜீரியா, ஈராக், சவுதிஅரேபியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா பகுதிகளில் முஸ்லிம் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்த மக்கள் இது போன்ற பயங்கரவாத அமைப்பினரை வெறுக்கின்றனர். ஆதரவு அளிக்க அவர்கள் விரும்பவில்லை.

இந்த அமைப்பினருக்கு எதிராக இமாம்கள் , மற்றும் ஏற்கனவே பயங்கரவாத அமைப்பில் இருந்து திருந்தி வாழ்பவர்கள் அல்குவைதாவின் தவறான நோக்கத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்து விட்டனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .