2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸுக்கு கீழ் குண்டு வெடித்தது: 14 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மாலிப் பிராந்தியமான மொப்டியில் பயணித்த பயணிகள் பஸ்ஸொன்றின் கீழ் குண்டொன்று நேற்று வெடித்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதோடு, 24 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சர் சாலிஃப் தரோரே தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய ஆயுததாரிகள் செயற்பாட்டிலிருக்கின்ற, வைரிக் குழுக்களின் பொதுமக்களை இனக்குழும ஆயுதக் குழுக்கள் வழமையாகக் கொல்லுகின்ற பகுதியிலிருந்த நிலக்கண்ணிவெடியையே 60 பயணிகளைக் கொண்டிருந்த பஸ் தாக்கியுள்ளது.

இந்நிலையில், 14 பேர் கொல்லப்பட்டதாகவும், ஆபத்தான நிலையிலுள்ள எழுவர் உள்ளடங்கலாக 24 பேர் காயமடைந்துள்ளதாக சாலிஃப் தரோரே தெரிவித்தபோதும், தாக்குதலைப் பற்றியோ அல்லது யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்பதைப் பற்றியோ கருத்தெதனையும் தெரிவித்திருக்கவில்லை.

பேர்க்கினா பாஸோ, மாலி, நைகர் சந்திக்கும் குறித்த ஒதுக்குபுறமான எல்லைப் பிராந்தியமானது இஸ்லாமிய ஆயுததாரிகளின் புகலிடமொன்றாக மாறியுள்ளது. அவர்கள், ஐக்கிய நாடுகள், மாலி, சர்வதேசப் படைகளின் மீது தாக்குதல்களை நடத்துகின்ற நிலையில், நிலக்கண்ணிவெடிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .