2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதுகாப்புச் சபையில் சர்ச்சை: ஜனநாயக நாடா துருக்கி?

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, அவ்வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதற்காக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த அறிக்கை, எகிப்தின் எதிர்ப்பால் வெளியிடப்படாது நிறுத்தப்பட்டது.

குறித்த அறிக்கையில், "துருக்கியில் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை, அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும்" என்று காணப்பட்டிருந்தது. அத்தோடு, அங்கு இடம்பெற்ற வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நடைமுறையின்படி, அங்கத்துவ நாடுகள் 15உம், இணைந்து ஏற்றுக் கொண்டாலேயே, ஓர் அறிக்கை வெளியிடப்பட முடியும்.

எனினும், "ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம்" என்ற வார்த்தைப் பிரயோகங்களை, எகிப்து எதிர்த்தது. எந்தவோர் அரசாங்கமும் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டதா, இல்லையா என்ற கருத்தை வெளியிடும் தகைமை, அவைக்கு இல்லை என எகிப்து வாதிட்டது. அத்தோடு, "துருக்கியிலுள்ள தரப்பினரை,ஜனநாயகத்தையும் அரசியலமைப்புக் கொள்கைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்குமாறு கோருகிறோம்" என்பதை, மாற்றீடாக அந்நாடு பிரேரித்தது. எனினும், அச்சொற்பிரயோகத்தில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை.

எகிப்தின் தற்போதைய ஜனாதிபதியான அப்டெல் பட்டா அல்-சிசி, அந்நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதியென்பதோடு, தேர்தல் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியான மொஹமட் முர்சியை, 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கியிருந்தார். அதன்போது, முர்சிக்கே தனது ஆதரவை, துருக்கி வெளியிட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .