2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'பொதுமக்களைக் கொல்கிறது மியான்மார்'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ரோகிஞ்சா முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மியான்மார் இராணுவம், வன்முறைகளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அந்த வன்முறைகள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களாகக் கணிக்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

"முக்கியமான கட்டத்தில் நாம்" ரோகிஞ்சா: மியான்மாரின் துன்புறுத்தல், பங்களாதேஷில் புறக்கணித்தல் என்ற பெயரில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 9ஆம் திகதி, ராக்கைன் மாநிலத்தின் எல்லைப் பொலிஸாரின் சோதனைச் சாவடிகள் மூன்றை, சில நூற்றுக் கணக்கானோர் தாக்கி, 9 பொலிஸாரைக் கொன்றதையும் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றதையும் ஞாபகப்படுத்திய சர்வதேச மன்னிப்புச் சபை, அதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ரோகிஞ்சா முஸ்லிம் மக்களுக்கு, பெரும் இடராக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வன்முறையாளர்களை இலக்குவைத்தே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவற்றுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதாக, அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆயுததாரிகளுடன் குறைந்தளவு தொடர்பு அல்லது தொடர்புகளே இல்லாத பொதுமக்களை இலக்குவைத்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

தங்களது ஆய்வுகளின்படி, எழுமாற்றான தாக்குதல்களும் கொலைகளும், படையினரால் மேற்கொள்ளப்படுவதோடு, எழுந்தமான கைதுகளும் தடுப்புகளும் இடம்பெறுவதைக் கண்டுபிடித்துள்ளதாகவும் வன்புணர்வுகளும் ஏனைய வகையான பாலியல் வன்முறைகளும் இடம்பெற்று வருவதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, ரோகிஞ்சா மக்களின் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீடுகள் உட்பட 1,200க்கும் மேற்பட்ட கட்டங்களை, படையினர் எரித்துள்ளதைத் தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அச்சபை தெரிவிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .