2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'13 பேர் உயிரிழந்த தாக்குதலுக்கு குர்திஷ் ஆயுததாரிகளே பொறுப்பு'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பஸ் மீது நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு, குர்திஷ் ஆயுததாரிகளே பொறுப்பு என, ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் குற்றஞ்சாட்டியுள்ளார். கடமையில் இல்லாத படையினரை ஏற்றிச் சென்ற பஸ் மீது, கெய்சேரி நகரில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில், 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு, 56 பேர் காயமடைந்திருந்தனர்.

ஏற்கெனவே, இஸ்தான்புல்லில் இரட்டைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வாரத்தில் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

"இந்தத் தாக்குதல்களின் பாணிகளும் இலக்குகளும், துருக்கியைக் குழம்ப வைப்பதற்கும் நாட்டின் பலத்தைக் குறைப்பதற்கும் நாட்டின் சக்தியையும் படைகளையும் வேறு இடங்களில் வைக்க வைப்பதற்கான முயற்சியும், பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பின் தெளிவான நோக்கங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன" என்று, ஏர்டோவான் குறிப்பிட்டார்.

குர்திஷ் ஆயுததாரிகளையே, "பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பு" என, ஜனாதிபதி ஏர்டோவான் குறிப்பிடுவது வழக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X