2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போர்க் குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டவர் பிரேஸிலில்கைதானார்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 31 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூகோஸ்லாவியா நாடு இருந்த போது, அங்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவரை, பிரேஸில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 1992ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்தவராக நிக்கொலா செரனிக் என்பவரே, இன்டையடியூபா என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

நிக்கொலாவுக்கு எதிராக, இன்டர்போலினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததோடு, "பொதுமக்கள் குடித்தொகைக்கெதிராக போர்க் குற்றம்" புரிந்தார் என்ற குற்றச்சாட்டு, அவர் மீது காணப்படுவதாக அவ்வமைப்பின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

எனினும், அவருக்கெதிரான தனிப்பட்ட குற்றங்கள் என்ன என்பது தொடர்பாகவோ அல்லது எவ்வளவு காலமாக பிரேஸிலில் வசித்தார் என்பது தொடர்பாக, இன்டர்போல் அதிகாரிகளோ அல்லது பிரேஸில் அதிகாரிகளோ பதிலளிக்கவில்லை.

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவரை பொஸ்னியா தேடும் நிலையில், அவரை நாடுகடத்துவதற்கான கோரிக்கையை, பிரேஸில் உச்ச நீதிமன்றத்திடம், அந்நாட்டு அதிகாரிகள் கோரியுள்ளனர். அந்த அனுமதி கிடைக்கப்பெற்றால் மாத்திரமே, அவர் நாடுகடத்தப்பட முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .