2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பெரும் செவ்வாய்: தலா 7 மாநிலங்களை வென்றனர் ஹிலாரி, ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் செவ்வாய் என்றழைக்கப்படும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் தேர்தல்கள், இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்றன. இதில், ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஜனநாயகக் கட்சிக்கான தேர்தல், அலபாமா, ஆர்கன்ஸஸ், கொலராடோ, ஜோர்ஜியா, மஸசூடெஸ், மினெசொட்டா, ஒக்லகாமா, தென்னஸி, டெக்ஸாஸ், வேர்மொட், வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் இடம்பெற்றன. குடியரசுக் கட்சிக்கான தேர்தல், அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்ஸஸ், ஜோர்ஜியா, மஸசூடெஸ், மினெசொட்டா, ஒக்லகாமா, தென்னஸி, டெக்ஸாஸ், வேர்மொட், வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் இடம்பெற்றன.

ஜனநாயகக் கட்சியின் 11 மாநிலங்களில், கொலராடோ, மினெசொட்டா, ஒக்லகாமமா, வேர்மொட் ஆகிய நான்கு மாநிலங்களைத் தவிர ஏனைய மாநிலங்களை, ஹிலாரி கிளின்டன் வெற்றிகொண்டார்.

அலபாமாவில் 78 சதவீதம், ஆர்கன்ஸஸில் 66 சதவீதம், ஜோர்ஜியாவில் 71 சதவீதம், மஸசூசெட்ஸில் 50 சதவீதம், தென்னஸியில் 66 சதவீதம், டெக்ஸாஸில் 65 சதவீதம், வேர்ஜினியாவில் 64 சதவீதமென, அவரது வாக்கு நிலைமை காணப்பட்டது. கொலராடோவில் 59 சதவீதம், மினெசொட்டாவில் 62 சதவீதம், ஒக்லகாமாவில் 52 சதவீதம், சொந்த மாநிலமான வேர்மொட்டில் 86 சதவீதமென, பேர்ணி சான்டர்ஸ் வெற்றிபெற்றார்.

மறுபுறத்தில், குடியரசுக் கட்சி சார்பாக அலபாமாவில் 43 சதவீதம், ஆர்கன்ஸஸில் 33 சதவீதம், ஜோர்ஜியாவில் 39 சதவீதம், மஸசூசெட்ஸில் 49 சதவீதம், தென்னஸியில் 39 சதவீதம், வேர்மொட்டில் 33 சதவீதம், வேர்ஜினியாவில் 35 சதவீதமென, டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.

டெட் குரூஸ் அலாஸ்காவில் 36 சதவீதம் (ட்ரம்ப் 34 சதவீதம்), ஒக்லகாமாவில் 34 சதவீதம் (ட்ரம்ப் 28 சதவீதம்), டெக்ஸாஸில் 44 சதவீதம் (27 சதவீதம்) என வெற்றிபெற்றார். மார்க்கோ றூபியோ, மினெசொட்டாவில் 37 சதவீத (ட்ரம்ப் 21 சதவீதம், குரூஸ் 29 சதவீதம்) வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

வேட்பாளர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு, பெரும் செவ்வாயில் பெறப்படும் வெற்றிகள் மிக முக்கியமானவை என்பதால், இரு கட்சிகளினதும் முன்னணி வேட்பாளர்களே இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளமை, அவர்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டன் பெற்ற 7 வெற்றிகளில் ஒன்றைத் தவிர மற்றைய எல்லாமே, மிகப்பெரிய வெற்றிகளாக அமைந்துள்ள நிலையில், பேர்ணி சான்டர்ஸின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையை அவர் போட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X