2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பெரிய சனிக்கிழமை": குரூஸ், சான்டர்ஸ், ட்ரம்ப் - 2: ஹிலாரி - 1

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 06 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பிரதிநிதிகள் தேர்தலில், பெரிய செவ்வாய்க்கிழமை என அழைக்கப்படும் நாளில் 11 மாநிலங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பெரிய சனிக்கிழமை என அழைக்கப்பட்ட போட்டியில், குடியரசுக் கட்சியில் 4 மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சியில் 3 மாநிலங்களிலும் தேர்தல்கள் இடம்பெற்றன.

இதில், டெட் குரூஸ், பேர்ணி சான்டர்ஸ், டொனால்ட் ட்ரம்ப் மூவரும் தலா 2 மாநிலங்களிலும் ஹிலாரி கிளின்டன் ஒரு மாநிலத்திலும் வெற்றிபெற்றனர்.

ஜனநாயகக் கட்சிக்கான போட்டியில், கன்ஸாஸ் மாநிலத்தில் பேர்ணி சான்டர்ஸ் 67.7 சதவீத வாக்குகளின் 23 பிரதிநிதிகளைப் பெற்று வெற்றிபெற, 32.3 சதவீத வாக்குகளுடன் 10 பிரதிநிதிகளை மாத்திரம் ஹிலாரி கிளின்டன் பெற்றார். நெப்ரஸ்காவில் 56.4 சதவீத வாக்குகளுடன் 14 பிரதிநிதிகளை பேர்ணி சான்டர்ஸூம் 43.6 சதவீத வாக்குகளுடன் 10 பிரதிநிதிகளை ஹிலாரி கிளின்டனும் பெற்றனர். லூசியானாவில் ஆதிக்கம் செலுத்திய ஹிலாரி கிளின்டன், 71.1 சதவீத வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளின்டன், 35 பிரதிநிதிகளுடன் பெருவெற்றியைப் பெற, பேர்ணி சான்டர்ஸால் 23.2 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்று, 10 பிரதிநிதிகளை மாத்திரம் பெற முடிந்தது.இதில், 2 மாநிலங்களில் தோல்வியடைந்த போதிலும், தோல்வியடைகின்ற மாநிலங்களிலும் பிரதிநிதிகளைப் பெற்றுவரும் ஹிலாரி கிளின்டன், ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளராகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்.

குடியரசுக் கட்சிக்கான போட்டியில், கன்ஸாஸில் 48.2 சதவீத வாக்குகளைப் பெற்று, 24 பிரதிநிதிகளை டெட் குரூஸ் பெற்றார். டொனால்ட் ட்ரம்புக்கு 23.3 சதவீத வாக்குகளும் (9 பிரதிநிதிகள்), மார்க்கோ றூபியோவுக்கு 16.7 சதவீத வாக்குகளும் (6 பிரதிநிதிகள்), ஜோன் கேசிச்சுக்கு 10.7 சதவீத வாக்குகளும்; (1 பிரதிநிதி) கிடைத்தன. மைன் மாநிலத்தில் டெட் குரூஸூக்கு 45.9 சதவீத வாக்குகளும், டொனால்ட் ட்ரம்புக்கு 32.6 சதவீத வாக்குகளும் ஜோன் கேசிச் 12.2 சதவீத வாக்குகளும் கிடைத்தன. லூசியானாவில் டொனால்ட் ட்ரம்புக்கு 41.4 சதவீத வாக்குகளும் டெட் குரூஸூக்கு 37.8 சதவீத வாக்குகளும் கிடைத்தன. மார்க்கோ றூபியோ, ஜோன் கேசிச் இருவரும் முறையே 11.2, 6.4 சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும் பிரதிநிதிகளை வெல்லவில்லை. கென்டக்கியில் 35.6 சதவீத வாக்குகளை டொனால்ட் ட்ரம்ப் வென்றார். டெட் குரூஸூக்கு 31.6 சதவீதம், மார்க்கோ றூபியோவுக்கு 16.4 சதவீதம், ஜோன் கேசிச் 14.4 சதவீத வாக்குகளைப் பெற்றனர்.
குடியரசுக் கட்சியின் இந்த முடிவுகளைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்புக்கு பிரதான போட்டியாளராக, டெட் குரூஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதோடு, மார்க்கோ றூபியோவுக்கு பின்னடைவை வழங்கியதாகவும் இம்முடிவுகள் அமைந்தன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .