2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிளைடுபாய் விபத்து: விமானத்திலிருந்த அனைவரும் பலி

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஒன்-டொன் நகரத்தில் தரையிறங்க முயன்ற பிளைடுபாய் விமானனொன்று விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 62 பயணிகளும் விமானச் சிப்பந்திகள் குழுவும் பலியாகியுள்ளனர் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டுபாயிலிருந்து பயணித்து, இன்று காலை விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த 62 பேரும் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணை சபை ஒன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. விமானம் தரையில் மோதி சிதறுண்டதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, முதற்கட்ட தரவுகளின்படி 55 பயணிகளும் 7 விமானச் சிப்பந்திகளும் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விமானமானது பிளைடுபாய் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 737 இரக விமானமென்று நம்பப்படுகிறது.

விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் தெரியவந்திராத போதிலும், மோசமான காலநிலை காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானம் தரையிறங்க முயற்சிப்பத்துக்கு முன்னர் பல தடவைகள், ரொஸ்டோவ்-ஒன்டொன் விமானநிலையத்துக்கு அருகில் வட்டமிட்டுள்ளமை பிளைட் ராடார் 24 எனும் விமானப் பாதையை கண்காணிக்கும் மென்பொருளில் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .