2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘மனிதக் கேடயத்தைப் பயன்படுத்தியதில் தவறில்லை’

Editorial   / 2017 மே 30 , பி.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மிரில் இடம்பெற்று வரும் கீழ்த்தரமான மோசமான போரை, புதுமையான வழிகளில் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள இராணுவ தளபதி பிபின் ராவத், காஷ்மிரில் இடம்பெற்ற கல்வீச்சின் போது, உள்ளூர்வாசி ஒருவரை இராணுவத்தினர் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியமைக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

காஷ்மிரின் ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு, கடந்த மாதம் 9ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் போது, பல இடங்களில் வன்முறை வெடித்ததோடு, இராணுவத்தை சூழ்ந்துகொண்ட 1,200 பேர், அவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணிகளைக் கவனித்து வந்த இராணுவ அதிகாரி லீத்தல் கோகாய், உள்ளூரைச்சேர்ந்த பரூக் தார் என்ற வாலிபரை இராணுவ ஜீப்பில், மனிதக் கேடயமாகக் கட்டி வைத்தார்.

இது தொடர்பாக தனியார் நிறுவனமென்று வழங்கிய செவ்வியில், இராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளமையானது:

“காஷ்மிரில், இராணுவ வீரர்களின் மன உறுதியை மேம்படுத்துவது என் கடமை. அதற்காகத்தான், ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தல் சமயத்தில், கலவரக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டபோது, பொதுமக்கள், தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி ஊழியர்கள், இராணுவ வீரர்களுக்கு உயிர்ச் சேதம் இல்லாமல், மனிதக் கேடயத்தை பயன்படுத்திய மேஜர் லதூர் கோகாய்க்கு, விருது வழங்கினேன்.

“காஷ்மிரில் மறைமுகப் போர் நடக்கிறது. மறைமுகப் போர் என்பது கீழ்த்தரமான போர். அதைப் புதுமையான வழிகளில்தான் எதிர்கொள்ள வேண்டும். எங்கள் மீது கலவரக்காரர்கள் கல்லெறிகிறார்கள், பெற்றோல் குண்டுகள் வீசுகிறார்கள். நாங்கள் என்ன செய்யட்டும் என்று, எமது வீரர்கள் என்னைக் கேட்டால், ‘பொறுமையாக இருந்து மடியுங்கள். தேசியக் கொடி போர்த்திய அழகிய சவப்பெட்டியுடன் வந்து, உங்கள் சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்ல வேண்டுமா?

“காஷ்மிரில் கடினமான சூழ்நிலையில் பணியாற்றும் வீரர்களின் மன உறுதியை, இராணுவத் தளபதியொருவர் என்ற முறையில், நான் உறுதிப்படுத்த வேண்டும்.

“உலகில் எந்த நாட்டிலும், இராணுவத்தின் மீது மக்களுக்குப் பயமில்லை என்றால், அந்த நாடு அழிந்துவிடும். எதிரிகள் உங்களைப் பார்த்து பயப்பட வேண்டும். அதேநேரத்தில் மக்களுக்கும் உங்கள் மீது பயம் இருக்க வேண்டும். நாங்கள் நட்புரீதியிலான இராணுவ வீரர்களாக இருக்கிறோம். அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க, எங்களை அழைத்து விட்டால், மக்களுக்குப் பயம் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .