2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மலேஷியா பிரதமரை அகற்றுவதற்கு எதிரணிகள் ஒன்றிணைவு

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

700 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பில், தற்போதைய மலேஷியப் பிரதமர் நஜீப் றசாக்கினா அகற்றக் கோரி நீண்டகாலமாக பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மகதிர் மொஹமட் தலைமையில் மலேஷிய அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களின் நூற்றுக்கணக்கான ஆதாவாளர்கள், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் பேரணியாகச் சென்றுள்ளனர்.

இதேவேளை, மலேஷியாவின் இஸ்லாமிய உயர்பீடத்திடம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதமர் நஜீப் றசாக்கினை அகற்றுமாறு மனுவை அளிக்க திட்டமிட்டுள்ளதாக அவரின் எதிர்தரப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) கூறியுள்ளனர்.

தவிர, தங்களது நிறுவனங்களின் இருப்பை நஜீப்பின் தலைமைத்துவம் குறைத்து மதிப்பிடுவதாக, 22 வருடங்களாக பிரதமராக இருந்து 2003ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற 90 வயதான மகதிர் தெரிவித்துள்ளார்.

நஜீப்பை அகற்றுவதன் மூலம் மலேஷியாவை பேரழிவிலிருந்து பாதுகாப்போம் என அழைப்பு விடுத்து ஆளும் கட்சியினதும் எதிர்க் கட்சியினதும் முக்கியத் தலைவர்கள் இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்திருந்தனர்.

முன்னாள் பிரதிப் பிரதமர் முஹைட்டின் யஸ்ஸின், ஜனநாயகக் நடவடிக்கை கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரும் மேற்படி பேரணியில் உரையாற்றியதாகவும் வரலாற்று ரீதியாக மகதிருடன் முரண்பாட்டைக் கொண்டுள்ளபோதும் சிறையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமும் இம்முன்னணிக்கு ஆதரவு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .