2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முக்காலா சோதனைச்சாவடிகள் மீது தாக்குதல்: ஐவர் பலி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் தென்கிழக்கு நகரமான முக்காலாவிலுள்ள இராணுவ சோதனைச்சாவடிகளுக்கு அருகில், கார்க் குண்டுகள் இரண்டு வெடித்ததில் சில பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை (18) காலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள், அரேபிய தீபகற்பத்திலுள்ள அல்-கொய்தாவான, உள்ளூர் அல்-கொய்தா பிரிவின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த துறைமுக நகரமான முக்காலாவின் கிழக்கு மற்றும் மேற்கிலுள்ள சோதனைச்சாவடிகளையே இலக்கு வைத்துள்ளன.

குறித்த தாக்குதல்களை ஜெனரல் பராஜ் சலேமைன் உறுதிப்படுத்தியதோடு, பயங்கரவாதிகள், குறைந்தது ஐந்து படைவீரர்களை கொன்றுள்ளதாக தெரிவித்த நிலையில், வேறு அறிக்கைகளின்படி, குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்றாமவுட் மாகாணத்தின் தலைநகரான முக்காலா, கடந்த ஏப்ரலில் சவூதி தலைமையிலான கூட்டணியால் ஆதரவளிக்கப்பட்ட அரசாங்கத் துருப்புகள் கைப்பற்றப்பட முன்னர், ஒரு வருடமாக அல்-கொய்தாவின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .