2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரஷ்ய விமானத் தாக்குதலில் 2 மாதங்களில் 400 பொதுமக்கள் பலி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 23 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த செப்டெம்பரிலிருந்து ரஷ்யா, சிரியாவில் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் காரணமாக, குறைந்தது 400 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் 30ஆம் திகதியிலிருந்து நவம்பர் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இதில், 97 பேர் சிறுவர்கள் எனவும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்தாண்டு ஒக்டோபரிலிருந்து, குறைந்தது 42,234 விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 22,370 குண்டுகள், பரல் குண்டுகளாக அமைந்ததாகவும், மொத்தமாக 6,889 பொதுமக்கள் மரணமடைந்துள்ளதாகவும் அந்தக் குழு அறிவிக்கிறது. அதில், 1,436 சிறுவர்களும் உள்ளடங்குவதாக, மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த காலப்பகுதியில், குறைந்தது 100,000 பேர், அலெப்போ பிரதேசத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவ்வமைப்புத் தெரிவிக்கிறது.

இதேவேளை, மற்றொரு மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகளுக்கான சிரிய வலையமைப்பு, செப்டெம்பர் 30இலிருந்து குறைந்தது 526 பொதுமக்கள், ரஷ்ய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 137 பேர் சிறுவர்கள் எனவும் அக்குழு தெரிவிக்கப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு ஆரம்பித்த சிரிய முரண்பாட்டின் காரணமாக, குறைந்தது 250,000 பேர் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, போர் ஆரம்பிக்கும் போது, சிரியாவில் காணப்பட்ட 22.4 மில்லியன் பேரில், பாதிப் பேர், உள்ளக இடப்பெயர்வுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ இடம்பெயர்ந்துள்ளதாக, அவ்வமைப்புத் தெரிவிக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X