2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரஷ்ய விமானத்தை வீழ்த்தியது இதுவே

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் சினாய் பகுதியில் வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குண்டின் படத்தை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அவ்வமைப்பின் ஆங்கிலச் சஞ்சிகையான டாபிக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மென்பானமொன்றின் தகரக் கொள்கலனும், ஆழியொன்றும் மின்கம்பிகனும், இன்னும் சிலவும் காணப்படுகின்றன. புகைப்படத்திலேயே 'பிரத்தியேகமானது: ரஷ்ய விமானத்தை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட, நவீன வெடிபொருள்" என எழுதப்பட்டுள்ளது.

அந்த மென்பானத் தகரக் கொள்கலனின் அடிப்புறத்தில், துவாரமொன்று காணப்படுகிறது. அதனூடாகவே, வெடிபொருள் உட்செலுத்தப்பட்டுள்ளது என எண்ணப்படுகிறது.

அந்தக் குண்டானது, எளிமையான முறையில் காணப்படுகின்ற போதிலும், சக்திவாய்ந்ததாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெடிபொருளை எவ்வாறு விமான நிலையப் பாதுகாப்பை மீறி, விமானத்துக்குள் கொண்டு சென்றார்கள் என்பதை, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டிருக்கவில்லை.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு நிபுணர்கள், வெடிபொருளைப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு சென்று, பின்னர் ஒன்றாக்கியிருக்கக்கூடிய வாய்ப்புகளே காணப்படுகின்றன எனத் தெரிவித்தனர். எனினும், குண்டொன்றை உட்கொண்டு செல்வது கடினமென்ற நிலையில், விமான நிலையத்தில் பணியாற்றும் எவரினதும் உதவியுடன் குண்டு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

குறித்த சஞ்சிகையானது, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்ற போதிலும், அதில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவலும் புகைப்படமும், எந்தளவுக்கு உண்மையானது என்பது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .