2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

றொவானு சூறாவளி தாக்கியதில் பங்களாதேஷில் 23 பேர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2016 மே 22 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் தென்பகுதி கரையோரத்தை சூறாவளி கடந்த சனிக்கிழமை (21) தாக்கியதில், பொழிந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மண் சரிவினாலும் 23 பேர் கொல்லப்பட்டதுடன் அரை மில்லியன் கணக்கான மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஜி.எம்.டி நேரப்படி 0600 மணிக்கு சூறாவளி தரையைத் தொட்டதில் மணிக்கு 88 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதில் பங்காளாதேஷின் தாழ்வான பகுதிகளில் உள்ள 500,000க்கு மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் நகர்த்தியுள்ளனர்.

சூறாவளியால் வறிய தென் மாவட்டங்களிலுள்ள மண் மற்றும் தகரத்திலான ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தாழ் நிலக் கிராமங்கள் இரண்டு மீற்றர் உயரம் வரையான வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, ஒதுக்குப்புறமான கரையோரத் தீவுகளில் வசிக்கின்ற பெரும்பாலனவர்கள் மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் இருக்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவ்விடங்களை அதிகாரிகள் இதுவரையில் சென்றடைந்திருக்கவில்லை.

இது தவிர, பாரிய மழையினால் மேலும் மண்சரிவுகள் ஏற்படுமென்ற அச்சத்தினால் சிட்டகொங் துறைமுக நகரத்திலிலுள்ள மலைப் பிராந்தியத்திலிருந்து மக்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். தவிர, தென்கிழக்கிலுள்ள சிட்டகொங் விமானநிலையத்தில் விமானங்களை அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளதுடன், உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து அதிகாரசபை, அனைத்துக் கப்பல்கள் மற்றும் படகுகளின் நகர்வுகளுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X