2024 மார்ச் 28, வியாழக்கிழமை

லிபியாவுடனான எல்லையை மூடியது துனிசியா

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 26 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

துனிசியாவின் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரைக் கொண்டு சென்ற பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லிபியாவுடனான எல்லையை, அடுத்த 15 நாட்களுக்கு மூடுவதாக, துனிசியா அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தமைக்கு மத்தியிலேயே, தற்போது இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

போரால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவுடனான எல்லையை மூடுவதற்கான முடிவை, ஜனாதிபதி பெஜி கெய்ட் எஸ்ஸெப்ஸி தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை எடுத்தது.

லிபிய எல்லையை மூடுவதற்கு மேலதிகமாக, பாதுகாப்புப் படைகளில் மேலதிகமாக 6,000 பேரை இணைத்துக் கொள்வதற்கு, துனிசியா தீர்மானித்துள்ளது. சிரியா போன்ற முரண்பாட்டுப் பகுதிகளிலிரந்து திரும்பும் துனிசியர்களிமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக, இவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பான முதற்கட்ட நடவடிக்கையில், இதுவொரு தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாமெனவும், அவர் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X